குமரி மாவட்டம் குழித்துறையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது குழித்துறை சந்திப்பு பகுதி அருகே சென்றபோது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் உள்ள போல்ட் மற்றும் நட்டுகள் தனியாக கழன்றது. இதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
அப்போது பேருந்து ஓட்டுநர் சாதூரியமாக செயல்பட்டு சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து, அரசுப் பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.