உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
போலநாத் காலனியில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பல இடங்களில் தண்ணீர் வடியாததால், பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். 3 நாட்களாக வீடுகளுக்குள்ளேயே சிக்கித் தவித்ததாகவும், ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.