ராமநாதபுரம் மாவட்டம், மூலக்கரைப்பட்டி செல்வ கருப்பண்ணசாமி கோயிலில் 16-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
மூலவர் செல்வ கருப்பணசாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகளை பலியிட்டு அசைவ உணவு சமைக்கப்பட்டது. பின்னர் அவற்றை சாமிக்கு படையலிட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.