மேற்கு வங்கத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ.-வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேற்கு வங்க மாநிலம் சோப்ரா எம்.எல்.ஏ. ஹமிதுர் ரஹ்மானுக்கு நெருக்கமான கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பெண்ணை பொதுவெளியில் கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தை ஆளும் பெண் முதல்வரின் ஆட்சியின்கீழ், இதுதான் கள நிலவரம் என்றும், அந்தப் பகுதிக்கு தங்களது பிரநிதிகளை அனுப்ப திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தைரியம் இருக்கிறதா என்றும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.