ஆந்திராவில் உயர்த்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் முதியோர்கள், விதவைகள், நெசவாளர்கள், மீனவர்கள், தனித்து வாழும் பெண்கள் உள்ளிட்டோருக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என என்டிஏ கூட்டணி வாக்குறுதி அளித்தது.
அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 65 லட்சம் பயளாளிகளுக்கு 4 ஆயிரத்து 399 கோடி ரூபாய் மதிப்பில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என கடந்த 13ஆம் தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குண்டூர் தாடேபள்ளி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கிராம மக்களுடன் கலந்துரையாடிய அவர், ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் வாக்குறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்தார்.