திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாலை தடுப்பில் மோதி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரையை சேர்ந்த திருமுருகன் என்பவர், குட்டூர் பிரிவு அருகே சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திருமுருகன் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.