நாடாளுமன்றத்திற்கு எப்போதாவது ஒருமுறை வருகை தரும் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியற்றவர் என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாஜக எம்பி அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இண்டியா கூட்டணியில் உள்ள டெல்லி அமைச்சர்கள் அனைவரும் சிறையில் உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறிய அனுராக் தாக்கூர்,கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தனியாக விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
2ஜி ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆட்சியில்தான் தமிழகத்தில் இத்தகைய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சாடினார்.
நாடாளுமன்றத்தில் குறைவான வருகை பதிவேடு கொண்ட ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியற்றவர் எனவும் விமர்சித்தார். மேலும், எமர்ஜென்சியின்போது காங்கிரஸ் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகத்தையும் அனுராக் தாக்கூர் சுட்டிக்காட்டினார்.