மேற்கு வங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
Aug 20, 2025, 10:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Web Desk by Web Desk
Jul 1, 2024, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில், பட்டப் பகலில் நடுத் தெருவில், பொது மக்கள் முன்னிலையில், ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் சுயநினைவு இழக்கும் வரை, ஒருவர் பிரம்பால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு .

மேற்கு வங்க மாநிலத்தில் ,உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவில் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பட்டப் பகலில் நடுத்தெருவில் பொது மக்கள் முன்னிலையில், ஒருவர் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடிவாங்கிய ஆணும், பெண்ணும் முறை தவறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, அக்கிராமத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்து கூட்டத்தில் குற்றம் செய்தவர்களுக்குப் பிரம்பு அடி தண்டனை கொடுக்க முடிவு செய்ததாகவும் அதன்படி பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

தாலீபான் இஸ்லாமிய அடிப்படைவாத பாணியில் , இன்சாப் சபா வழங்கிய உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்த இந்த கொடூரத் தாக்குதல் வீடியோவை சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இங்கே மேற்கு வங்கத்தில் கங்காரு நீதிமன்றம் போல ஜேசிபி என்ற புனைபெயர் கொண்ட அதிகாரப் பூர்வ குண்டர்கள் தனி நீதிமன்றம் நடத்துகிறார்கள் என்றும், அவர்களே சுருக்கமாக விசாரித்து விட்டு தண்டனை வழங்குகிறார்கள் என்றும் முகமது சலீம் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை எடுத்தவர் காவல்துறையினரால் அராஜகமான முயைில் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ள முகமது சலீம், இது தான் மம்தாவின் புல்டோசர் நீதி என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இஸ்லாம்பூர் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தஜிமுல் என்ற நபரைக் கைது செய்துள்ளனர் .

விசாரணையில், கைதான தஜிமுல் சோப்ரா பகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஹமீதுல் ரகுமானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிய வந்துள்ளது.

மேற்குவங்கத்தில் கடந்த 25 ஆம் தேதி, ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி,தலைமுடியைப் பிடித்து தெருவில் தர தர வென இழுத்துச் சென்ற சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

இது மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக இல்லை என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன என்று பாஜக கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறது.

‘ஷரியா சட்டம்’ போன்ற ஒரு கொடூர ஆட்சி மேற்கு வங்கத்தில் கொண்டுவரும் பாதையில் திரிணாமுல் காங்கிரஸ் நடக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ள பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை நடைமுறை படுத்தும் மாநிலமாக மேற்கு வங்கம் மாறுகிறதா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் அமித் மாளவியா,”மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியின் அசிங்கமான முகம் இது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் சந்தேஷ் காலி சம்பவங்கள் நடக்கின்றன என்றும், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மேலும் பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் , தனது எக்ஸ் தளத்தில் ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் இது தான் பெண்களுக்கு பாதுகாப்புக்கான நிலவரம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: In West BengalTaliban culture is cruel to women!
ShareTweetSendShare
Previous Post

சமூக ஆர்வலர் மேதா பத்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை!

Next Post

மக்களவை விதிகளை ராகுல் கடைப்பிடிக்க வேண்டும்!- கிரண் ரிஜிஜு

Related News

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies