டெல்லி துணைநிலை ஆளுநரும், காதி மற்றும் கிராம தொழில் ஆணைய முன்னாள் தலைவருமான வி.கே. சக்சேனாவை விமர்சித்த வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பத்கருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வி.கே. சக்சேனா குறித்து மேதா பட்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு 5 மாதம் சிறை தண்டனையும், 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வி.கே. சக்சேனாவுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
பின்னர், மேதா பட்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்களுக்கு நீதிபதி நிறுத்திவைத்தார்.