அமெரிக்க அதிபர் தேர்தல் மாற்றப்படுகிறாரா வேட்பாளர் ஜோ பைடன்?
Jan 15, 2026, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் மாற்றப்படுகிறாரா வேட்பாளர் ஜோ பைடன்?

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 07:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் நேரடி விவாதத்தில் தடுமாறிய அதிபர் ஜோ பைடனை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆளும் ஜனநாயக கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட உள்ளனர்.

இரு கட்சிகளும் விரைவில் நடத்த இருக்கிற தங்கள் கட்சி மாநாட்டில், தங்கள் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் , ஜோ பைடனும், டிரம்பும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர்தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

ஒட்டு மொத்தமாக அந்த விவாத நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் பல இடங்களில் தடுமாறினார். மேலும், ட்ரம்பின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதிபர் ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் ஆளும் ஜனநாயக கட்சியினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜோ பைடனின் முதுமையே தடுமாற்றத்துக்குக் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் மாற்றப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிக்சல் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை மாற்றுவதற்கான தேவை இல்லை என்று ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் நிராகரித்துள்ளனர். மேலும், குடியரசு கட்சியினர் தான், டொனால்ட் டிரம்ப்க்குக் பதிலாக வேறு நபரைத் தேடவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே , இந்தத் தேர்தல், தன் வாழ்நாள் முழுவதும் சாதாரண மக்களுக்காகப் போராடிய ஒருவருக்கும், தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்ட ஒருவருக்கும் இடையிலான தேர்தலாக உள்ளது என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Tags: Is the US presidential election being changed by candidate Joe Biden?
ShareTweetSendShare
Previous Post

முடிவுக்கு வந்த 150 ஆண்டு கால நடைமுறை!

Next Post

KOLLYWODD TO HOLLYWOOD ரஜினியின் பிறமொழிப் படங்கள்!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies