நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் முதல் நாளில் 100 வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை புதிய குற்றவியல் சட்டங்களின்படி, சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. செல்போன் பறிப்பு தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், கோட்டூர்புரம் என சென்னையில் 10 வழக்குகள் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெல்லையில் 6 வழக்குகளும், கோவை மற்றும் தேனியில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய குற்றவியல் சட்டங்களின் படி முதல் நாளில் தமிழகத்தில் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.