கேரள மாநிலம் மூணாறு அருகே, கடைக்கு சென்றுவிட்டு திரும்புவதற்குள் ஆட்டோவில் தேனீக்கள் கூடு கட்டியதால், ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.
ரவி என்ற ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணிய கோவில் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்ற நிலையில், திரும்பி வருவதற்குள்
தேனீக்கள் ஆட்டோவில் கூடு கட்டியிருந்தன.
செய்வதறியாது திகைத்த அவர், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் புகை மூலம் தேன்கூட்டை கலைத்தனர்.