சுற்றுலா தலமான குற்றாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்த பேரூராட்சி நிர்வாகத்திடம் போலீசார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமாலயம் தெரு வழியாக கனரக லாரிகள் மூலம் கேரளாவுக்கு கனிம வளங்கள் எடுத்து செல்லப்படுகின்றன.
தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்வதால், அருகிலுள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் அங்கு குடியிருக்கும் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில், குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன் ஏற்பாட்டில், அப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்ற போர்டும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.