புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
பெருங்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
எனவே பொதுவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.