கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
அங்குள்ள தனியார் திரையரங்கம் அருகே சாலையில் வசித்து வரும் சுப்பம்மாள் என்பவர் வருவாய்த்துறைக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து அதனை கார் நிறுத்துமிடமாகவும், பழைய பொருட்கள் வைக்கும் அறையாகவும் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டனர்.