திருச்சி மாவட்டம் முசிறி அருகே பூட்டிக் கிடந்த மளிகைக்கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தோளூர்பட்டியை சேர்ந்த ஞானசேகரன் தனக்கு சொந்தமான கடையை முருகானந்தம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் முருகானந்தம் நடத்திவரும் மளிகைக் கடைக்கு வெளியே நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.