விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்ககாக வருகின்ற ஜூலை 6ம் தேதி மீண்டும் நடிகர் அஜித் அஜர்பைஜான் நாடிற்கு செல்கிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. மேலும் இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அஜித் மற்றும் பட குழுவினர் அஜர்பைஜானுக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அஜர்பைஜானில் இருந்து நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், ஷாலினிக்கு சிகிச்சை நடைபெற்றது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நமது செய்தியாளரிடம் கூறியதாவது,
நடிகர் அஜித்குமார் நான்கு நாட்கள் விடாமுயற்சி படபிடிப்பிலிருந்து பிரேக் எடுத்து உள்ளார். நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இது மைனர் சிகிச்சை தான் எனவும். இது குறித்த அதிகார அறிவிப்பு நாளை தருவதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். மேலும் ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு நடிகர் அஜித் செல்கிறார் எனத் தெரிவித்தார்.