தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு!- அண்ணாமலை
Aug 28, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒவ்வொரு மாநில மக்களையும் கம்யூனிஸ்ட் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

தமிழகக் கலாச்சாரத்தின் பெருமையான செங்கோலையும், பண்டைய தமிழக மன்னர்களையும், நமது மூதாதையரான பண்டைய தமிழக மகளிரையும் அவமானப்படுத்திவிட்டு, பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்ததும் செங்கோலுக்குப் புதியதோர் விளக்கம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் சு. வெங்கடேசன் அவர்கள்.

நீதி மற்றும் அறத்தின் குறியீடு செங்கோல் என்பதை ஒப்புக்கொள்ளும் நீங்கள், ஜனநாயகத்தில் நீதி மற்றும் அறத்துக்கு இடமில்லை என்று சொல்ல முயற்சிப்பதைப் போலத் தெரிகிறது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத இந்தி கூட்டணிக் கட்சிகளிடம் இல்லாத நீதி மற்றும் அறம், ஜனநாயகத்தில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே, பாராளுமன்ற அவையின் மையத்தில் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை, உங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தங்களின் நாவல்களில், காலம்தான் கதாநாயகன் என்று கூறியிருக்கிறீர்கள். நன்று. காலநதி, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கூழாங்கல்லைப் போல உருட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் எது என்பதையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.

ஒரு தொகுதிக்கும் இரண்டு தொகுதிக்கும், திமுகவிடம் ஒட்டு மொத்த கட்சியையுமே அடகு வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு, இவற்றை எல்லாம் பேசத் தகுதி உள்ளதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? காலாவதியான ஒரு சித்தாந்தத்தை, தங்கள் சந்தர்ப்பவாதத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு.

தமிழக எல்லை வரை காங்கிரஸுடன் கூட்டணி, கேரளாவிற்குச் சென்றால், காங்கிரஸ் எதிர்ப்பு என்று, ஒவ்வொரு மாநில மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கொண்டு, அரசியல் சாசனம் குறித்தும், நேர்மையைக் குறித்து நீங்கள் பேசுவது நகைப்பிற்குரியது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒட்டு மொத்த இந்தி கூட்டணிக் கட்சிகளும் வென்ற தொகுதிகளையும் சேர்த்தாலும், பாஜக தனியாக வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைப் பெற முடியவில்லை என்ற உண்மை எப்போது உங்களுக்கு உரைக்கும்? இறுதியாக, மதுரை மேயருக்கு நீங்கள் கொடுத்த செங்கோலுக்கும், பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர் மரபு செங்கோலுக்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் கூறுவது, ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்துகிறது.

மனம் விட்டுச் சிரித்தேன். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உங்களிடம் இன்னும் சிறப்பான பதிலை எதிர்பார்த்திருந்தேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Today's communists are society's favorite evil!- Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு செல்கிறார் நடிகர் அஜித்!

Next Post

திமுக கிளை செயலாளர் வீட்டில் பதுக்கப்பட்ட வேட்டி, சேலைகள் பறிமுதல்!

Related News

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சீனா எச்சரிக்கை

ஆவணி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு

அமெரிக்க தளங்களால் அதிகரிக்கும் ஆபத்து : குவைத் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்? : அச்சத்தில் மக்கள் -சிறப்பு தொகுப்பு!

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு? : தர்மசங்கடத்தில் சவூதி – சிறப்பு தொகுப்பு!

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் – பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

கூடலூரில் ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வலியுறுத்தல் – கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies