கூடலூரில் ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி, கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலியில் அண்மையில் புலி தாக்கியதில் பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சொந்த ஊர் திரும்புமாறு கூடலூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுற்றுலா பயணிகளை மீண்டும் உதகைக்கு அனுப்பி வருகின்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் மக்களின் கோரிக்கையை ஏற்று சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
















