தென்னாட்டு தி கிங் ஆப் கிசான் : ஸ்ரீமான் ஸ்ரீகணேசன் ஜி கடந்து வந்த பாதை - சிறப்பு தொகுப்பு!
Aug 27, 2026, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னாட்டு தி கிங் ஆப் கிசான் : ஸ்ரீமான் ஸ்ரீகணேசன் ஜி கடந்து வந்த பாதை – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Aug 27, 2026, 11:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் மற்றும் பாரதிய கிசான் சங்க முன்னாள் அகில பாரத செயலாளர் ஸ்ரீ கணேசன் காலமானார்.  திருச்சி சாதனா காரியாலயத்தில் சிவலோக பிராப்த்தி அடைந்தார். அவர் கடந்து வந்த பாதை குறித்து விரிவாக பார்ப்போம்

பிறப்பு என்பது ஒரு பொதுவான நிகழ்வு என்றாலும், ஒருவரின் செயல்களே அவரது பெருமையை நிர்ணயிக்கின்றன. பிறப்பின் மூலம் அனைவரும் சமம் என்றாலும், செயல்கள் மூலம் தனித்தன்மை பெறலாம். அதற்கு மிகவும் பொருத்தமாவனர் ஸ்ரீகணேசன்.

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தனூர் என்ற கிராமத்தில், 1949ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சித்திரை புத்தாண்டு தினத்தில், விசாக நட்சத்திரத்தில் சீனிவாசன் – ஜமுனாபாய் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

இவருடன் உடன் பிறந்தவர்களில் மூன்று அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என 6 பேர் ஆவார்கள். ஸ்ரீகணேசன் பிறந்த அதே தினத்தில், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, சமூகத்தில் சமத்துவத்தின் புதிய சகாப்தத்தை நிறுவிய, நமது மதிப்பிற்குரிய பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஜியும் பிறந்தார்.

அப்பா, பெரியப்பா உடன்பிறந்த 6 பேருக்கு மத்தியில் ஒன்றரை ஆண்டுகாலம் கூட்டுக் குடும்பத்தில் ஒரே வீட்டில் வளர்ந்து வந்தார் ஸ்ரீகணேசன். அந்தகாலகட்டத்தில் முகுந்தனூர் கிராமத்தில் ஸ்ரீகணேசனுடைய தந்தை கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். ஆறு வயது வரை ஸ்ரீகணேசன் பூம்புகாரில் உள்ள தாத்தா ராமநாத சாஸ்திரி வீட்டில் பாட்டி அலமேலு அம்மையாரின் கவனிப்பில் வளர்ந்து வந்தார் .

அவர்கள் அங்கு துணிக்கடை நடத்தி வந்தனர். ‘சமூகத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் நேர்மையுடன் நடப்பதுதான் உண்மையான ‘தர்மம்’ என்ற கூட்டுக் கொள்கையுடன் ஸ்ரீகணேசன் வளர்க்கப்பட்டார்.

ஸ்ரீகணேசன் தனது சொந்த கிராமத்தில் ஆறாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் உயர்நிலை வகுப்பு படித்தார். கல்வி கற்கும் காலத்திலேயே ஸ்ரீகணேசன் தமிழ்பற்றும் தேசப் பற்றும் உடையவராக இருந்தார். அந்த நேரத்தில் 1963ல் குரோம்பேட்டை பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஷாகா வேடிக்கை பார்த்ததன் மூலம் ஸ்ரீகணேசன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒருநாள் குரோம்பேட்டை பகுதியில் கபடி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் அந்த விளையாட்டை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். விளையாட்டு முடிந்த பின்னர் அனைவரும் வரிசையா ரவுண்டா நின்று கொண்டிருந்தனர். அப்போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் தரையில் உட்காரச் சொன்னார்கள். இதனால் சிறுவனாக இருந்த ஸ்ரீகணேசனும் தரையில் உட்கார்ந்தார். அப்போது ஒருவர் எங்கள் ஆரூயிர் தாய்நாடே என்று ஒரு பாட்டை பாடினார்.

எல்லாரையும் அதைத் திரும்ப பாடச் சொன்னார். அப்புறம் ஒரு அருமையான கதை சொன்னார். மகாத்மா காந்தி ஒரு கிராமத்தில் நிதி திரட்டியபோது ஒரு சிறுமி ஒரு சின்ன பென்சில் கொடுத்தாராம்.

அதைத் தேடியது பற்றிய கதை அது. அந்த கதையை கேட்ட ஸ்ரீகணேசன் உள்ளிட்ட சிறுவர்களை வெகுவாகவே கவர்ந்தது. கடைசியில் சமஸ்கிருத மொழியில் பிரார்த்தனை நடந்தது. கணேசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் அரை அரை வரியா சொல்லி திரும்ப திரும்ப சொல்லச் சொன்னார்.

பிரார்த்தனை முடிந்தது. அப்போது கணேசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் கதை சொன்வரிடம் ‘இதில் நாங்களும் கலந்துகொள்ளலாமா என்று கேட்டனர். உடனே அவரும் கணேசன்ஜியிடம் நாளையில் இருந்து வந்துடுனு சொன்னார். மறுநாள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சிறுவர் சேவக்காக அடியெடுத்து வைத்தார். ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பு, அவரது பள்ளிப் படிப்பை விட மிகவும் முன்னதாகவே இருந்தது,

சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஒரு சுயம் சேவகராக (தன்னார்வலராக) சேர்ந்தார். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆழமாக வேரூன்றியவர். தனது இளமை காலத்திலேயே பட்டியலின மக்கள் ஜாதிய ரீதியில் பாகுபாடு காட்டப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் கண்டு வருந்தியவர். அந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக ஊர், ஊராக பிரச்சாரம் செய்தவர். 1970ல் இருந்து ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக (முழுநேர ஊழியர்) இருந்து வருபவர்.

தமிழகத்தில் பல்வேறு இந்து இயக்கப் பிரமுகர்களை உருவாக்கியவர். மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ போன்ற பல்வேறு பிரபலங்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக மாற்றியவர்.

குறிப்பாக சேவா பாரதி பொறுப்பில் இருக்கும் சுந்தர லஷ்மணன் ஜி, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான முனைவர் எல். முருகன், இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவர் மதுரை ராஜகோபாலன், மூத்த பத்திரிகையாளர் பத்மன், தென்னிந்திய விவசாய சங்கத் தலைவராக தற்போது செயல்படும் அய்யாகண்ணு போன்ற பலரை இயக்கத்திற்கு கொண்டு வந்தவர் ஸ்ரீகணேசன்.

விவசாயிகளுக்கான இயக்கமான பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத அமைப்பாளராக இருந்தவர். ஏராளமான விவசாயிகளைத் தலைவர்களாக மாற்றிய பெருமை இவருக்குண்டு. இதனால் இவர் தென்னாட்டு தி கிங் ஆப் கிசான் என்று புகழை பெற்றார்.

உடல்நிலை தளர்ந்த 77வது வயதிலும், திருச்சியை மையமாக வைத்து தமிழகத்தில் உள்ள கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து வந்திருக்கிறார். ஸ்ரீகணேசனுடன் பழகியவர்கள் பலரும் அவருடன் பழகியதை இன்றும் கூட மறக்க முடியாது என்று கூறுகின்றனர்.

சங்கம் தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமிர்த காலத்தில் மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஸ்ரீகணசன் தனது பவளாவிழா பெருமையை பெற்றிருக்கிறார். 100 ஆண்டுகளில் இச்சங்கம் அசாத்தியமான அபாரமான சாதனை படைத்துள்ளதில் தென் பாரதத்தில் ஸ்ரீகணசனுக்கும் முக்கியமானவராக திகழ்கிறார்.

அவர் கடந்து வந்த பாதை (பிறப்பு முதல் இறப்பு வரை), அறிய புகைப்படங்களுடன் திருச்சி தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர் ராமசுப்பு தலைமையிலான டீம் எழுதிய ‘‘ளா பாரத்: ஆர்எஸ்எஸ் 100 இயர்ஸ் டெடிகேஷன்’’ என்ற மாபெரும் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது..

திருச்சி சாதனா டிரஸ்ட் ஆர்.எஸ்.எஸ் இல்லத்தில் வசிக்கும் ஸ்ரீகணேசன்ஜி, என்றும் ஒருவழிகாட்டும் சக்தியாக இருப்பார். ஒருஆன்மீக மூத்தவராகவும், தரிசனப்பார்வையுடைய மென்தோழராகவும், அவர் இன்று தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதன் எல்லைகளைத் தாண்டி பல சுவயம்சேவகர்கள், பொதுசேவையாளர், சமூகத்தலைவர்களுக்கு உந்துதலாக இருக்கிறார். மவுனமாகவும் விவேகத்துடன் உள்ள அவரது நுண்ணறிவும் வலிமையும், முக்கியதலைவர்களின் மரியாதையைப் பெற்றுள்ளது. அவர்கள் அவரை நண்பன், தத்துவ ஞானி மற்றும் வழிகாட்டி என மதிக்கின்றனர்.

ஸ்ரீமான் ஸ்ரீகணேசன்ஜியின் வாழ்க்கை, சேவை (சேவை), தவம் (துறவு), மற்றும் தர்மம் (நீதிசெயல்)ஆகிய மதிப்பீடுகளுக்கான உயிர்ப்பூத்த சாட்சியாக விளங்குகிறது. திருவாரூரின் ஒருசிற்றூரிலிருந்து இந்திய ஆன்மீக எழுச்சியின் இதயத்திற்குச் சென்ற அவரது பயணம், உண்மையான மகத்துவம் சத்தத்திலும் புகழிலும் அல்ல, தன்னலமற்ற செயலிலும் நிலையான நம்பிக்கையிலும் இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவரது மறைவு எதிர்கால சுவயம் சேவகர்களுக்கும் தேச பக்தர்களுக்கும் ஆன்மீக தேடுபவர்களுக்கும் வெளிச்சமான பாதையாகத் தொடரும்,

ஒருமுறை நெருங்கிய உறவினரும் நண்பரும் ஸ்ரீமான் ஸ்ரீகணேசன்ஜியிடம் ஒரு கேள்வியை எழுப்பினர்.

அதில்,‘‘இப்போ உன் உடம்பில் தொம்பு இருக்கு. வயசானா உன்னை யாரு பார்த்துப்பாங்க?’’ என்று கேள்வி கேட்ட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சொன்ன பதில் இதுதான், ‘‘இந்த மண்ணில் நல்ல காரியத்திற்காக, தேசத்துக்காக என்று வருபவனை சமுதாயம் கைவிடுவதே இல்லை.’’என்றார் ஸ்ரீகணேசன். அன்று முதல் இன்று (27.08.2026) சிவலோக பிராத்தி அடைந்தது வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றில் கண்ணுக்குத் தெரியாத வேர்கள் பலருண்டு. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் அகில பாரதிய கிசான் சங்க பொதுச் செயலாளரும், மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குமான ஸ்ரீ கணேசன் ஆவார்.

-ஆறுமுகம்ஜி-

 

Tags: All-India Secretary of the Bharatiya Kisan SanghSadhana KaryalayaMukundhanurShri GanesanRSS *PracharakRSS Pracharak Ganesan jiBharatiya Kisan Sangh
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸை கழற்றிவிடும் விஜய்? : தேசிய வெற்றி கழகமாக மாறும் தவெக – சிறப்பு தொகுப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸை கழற்றிவிடும் விஜய்? : தேசிய வெற்றி கழகமாக மாறும் தவெக – சிறப்பு தொகுப்பு!

ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தல் – கூடலூரில் 48 மணி நேர வேலைநிறுத்தம்!

இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்னாட்டு தி கிங் ஆப் கிசான் : ஸ்ரீமான் ஸ்ரீகணேசன் ஜி கடந்து வந்த பாதை – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies