விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் பூட்டை உடைத்து சாமியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலியை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
எஸ்.கொடிக்குளம் பகுதியில் மாதா அங்காள ஈஸ்வரி கோயில் அமைந்துள்ளது. வழக்கம்போல பூசாரி கோயிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.