நீட் தேர்வு தொடர்பான விஜயின் கருத்து விரும்பத்தகாதது என பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வுக்குப் பின்னர் அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாக தெரிவித்தார்.
நீட் தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
நிகழாண்டில் 2 லட்சம் மாணவர்கள் தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதியதாக கூறிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக பேசி விஜய் தனது மனநிலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.