ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் பேருந்து படிகட்டில் அபாயகரமான முறையில் பயணம் செய்வதாகவும் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதிக பேருந்துளை இயக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.