நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் குஜராத், பீகாரில் சிலரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த அமன்சிங் என்பவர் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.