தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.
இதன் இடைக்கால தலைவராக டாக்டர் கங்காதர் இருந்து வந்த நிலையில், அவர் முறைப்படி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவித்துள்ளது.