இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் நேர்மறையான சூழல், அமெரிக்க தேர்தலுக்கு முன்பு வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.
இதன் காரணமாக ஐ.டி. ஆட்டோமொபைல், மெட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்நிலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, சென்செக்ஸ் 0.02 சதவீதம் உயர்ந்து 80 ஆயிரத்து 155.03 புள்ளி ஆகவும் நிஃப்டி 31.90 சதவீதம் உயர்ந்து 24 ஆயிரத்து 324.70 புள்ளிகளிலும் வர்த்தகமாகியது.