விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3-வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என்ற பயம் காரணமாக அதிமுக போட்டியிடவில்லை எனவும், ஜெயக்குமார் போன்ற தலைவர்களாலேயே அதிமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,
விக்கிரவாண்டி தேர்தல் – 3-வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என அதிமுகவிற்கு பயம். ஜெயக்குமார் போன்றவர்களே அதிமுகவின் அழிவிற்கு காரணம் எனத் தெரிவித்தார். தென்சென்னை தொகுதியில் ஜெயக்குமார் மகன் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதிமுக அழிந்து கொண்டிருப்பது தொண்டர்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீட் தேர்வு யாருக்கும் எதிரானது அல்ல. “நீட் தேர்வு குறித்து தமிழக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு குறித்து பேச பேச பாஜகவிற்கு தான் நல்லது. நீட் குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது. விஜய் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது பாஜகவிற்கே சாதகம் தான் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மக்கள் விரும்புவதாகவும், மாநில கல்விக் கொள்கை தான் குலக்கல்வி முறையை வலியுறுத்துவதாக தெரிவித்தார். மும்மொழி கொள்கையில் தாங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம்” எனத் தெரிவித்தார். “இந்தியை எதிர்க்கும் தமிழக அரசு உருது பள்ளிகளை அதிகம் கொண்டுவர நினைப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதியை யாரும் கேள்வி கேட்காததாலேயே, அவர் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக தெரிவித்தார். யாரும் கேள்வி கேட்காததாலேயே ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் படிக்கும் மாணவர்களை ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியுள்ளார் எனக் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.