தமிழக பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க செயற்குழ கூட்டம் நாளை சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடசாலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் தமிழக பா.ஜ.க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டம் தமிழகத்தின் எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும் என்று கூறப்படுகிறது.