இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 11 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே உள்ளிட்டோருக்கு மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர்களை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் ஆகியோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.