கெயர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியம்!
Aug 18, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெயர் ஸ்டாமர் வெற்றியின் ரகசியம்!

Web Desk by Web Desk
Jul 6, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லை வைத்து , பிரிட்டன் அரசியலையே மாற்றிக் காட்டியிருக்கிறார், கெயர் ஸ்டாமர். அவர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்றதால் கெயர் ஸ்டாமர் பிரிட்டன் பிரதமராகி உள்ளார். இந்த சாதனையை படைத்த கெயர் ஸ்டாமர் யார்? அவரது பின்னணி பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

61 வயதான பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டாமர், தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிறுவயதில் தனது குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்ததாக தெரிவித்திருந்தார்.

1962ம் ஆண்டு, செப்டம்பர் 2ம் தேதி லண்டன் புறநகரில் உள்ள சவுத் வார்க்கில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் கெயர் ஸ்டாமர். அவரது தந்தை rodney starmer சிறிய தொழிற்சாலையில் பணியில் இருந்தார். செவிலியராக இருந்த தாய் josephine நீண்ட காலமாகவே அரியவகை நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். சிறுவயதில், தந்தையின் தொழிலுக்கு உதவியாகவும், தாயாருக்கு பணிவிடை செய்பவருமான இருந்துவந்துள்ளார் கெயர் ஸ்டாமர்.

குடும்பத்தில் முதல் பட்டதாரியான கெயர் ஸ்டாமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பின்னர், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.

இங்கிலாந்தின் உயரிய விருதான ‘சர்’ பட்டம் பெற்ற கெயர் ஸ்டாமர் 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்றார். போட்டியிட்ட முதல் தேர்தலில் 17,048 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். இந்த தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன் அவரது தாயார் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது வழக்குகள் இயக்குநராகவும் பணியில் திறமையாக செயல்பட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்றிருந்தார் கெயர் ஸ்டாமர்.

அல்-கொய்தா இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பிரிட்டனின் முதல் வழக்கை இவர் கையாண்ட விதத்தால் பிரிட்டனின் 9/11 தவிர்க்கப்பட்டதாக இன்றும் பிரிட்டன் மக்கள் இவரைக் கடவுள் போல் பார்க்கின்றனர்.

ஸ்டார்மர் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவுகள் மற்றும் தொலைபேசிஒட்டுக் கேட்பு ஊழல்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட வழக்குகளை வெற்றிகரமாக கையாண்டார். மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்திய இவர், தொழிலாளர் கட்சியின் அரசியல் வாதிகளுக்கும் எதிரான குற்றச் சாட்டுக்களை முன்வைத்தார்.

2011 ஆம் ஆண்டில் கறுப்பினத்தவர் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் ஏற்பட்டது. வடக்கு அயர்லாந்திலும் ஏற்பட்ட இதேபோல் ஒரு பிரச்சனை ஏற்பட்டு கலவரத்தைத் தூண்டியது. இதை எல்லாம் சுமுகமாக சமாளித்து, பிரிட்டனில் அமைதியை நிலைநாட்டிய பெருமை கெயர் ஸ்டாமருக்கு உண்டு.

ஐந்து வெவ்வேறு பிரதமர்களின் கீழ் 14 ஆண்டுகள் குழப்பமான ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் மீண்டும் கூறிய கெயர் ஸ்டாமர், கன்சர்வேடிவ் அரசு விட்டுச்சென்ற பிரச்சினைகளை தீர்க்க, nation first என்ற அடிப்படையில் “முதலில் நாடு , பிறகு கட்சி ” என்று பிரச்சாரம் செய்தார்.

16 வயதில் கட்சியில் சேர்ந்து, பல எதிர்ப்புகளுக்கிடையே மெல்ல மெல்ல முன்னேறி , 2020 ஆம் ஆண்டு, தொழிலாளர் கட்சியின் தலைவரானார். 14 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்த தொழிலாளர் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மாற்றிக் காட்டி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் கெயர் ஸ்டாமர்.

Tags: Keir Stammer's Secret to Success!
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட் தாக்கல்!

Next Post

ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை பின்னணி என்ன?

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies