COSTLY நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு முதலிடம்!
Oct 10, 2025, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

COSTLY நகரங்கள் பட்டியலில் மும்பைக்கு முதலிடம்!

Web Desk by Web Desk
Jul 7, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் விலைவாசி அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மும்பை முதலிடம் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வாழ்க்கை நடத்துவதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ள நகரங்களின் 2024ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை Mercer’s Cost of Living City தயாரித்து வெளியிட்டுள்ளது. உலக அளவில் 226 நகரங்களை ஆய்வு செய்து, இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் விலைவாசி அதிகம் உள்ள நகரங்களின் முதல் மூன்று இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சூரிச் ஆகிய நகரங்கள் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு முதல், இந்த மூன்று நகரங்களும் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

மக்களின் வாழ்வாதாரம் , வாழ்க்கைத் தரம் ,பொருளாதாரத்தில் பொருட்களின் அதிக விலை, ஆகியவற்றின் அடிப்படையில், விலை உயர்ந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.

நியூயார்க்கை அடிப்படை நகரமாக வைத்து இந்த ஆய்வு செய்யப் பட்டுள்ளது. மேலும் ஒரு நாட்டின் நாணயத்தின் நிலைத்தன்மையை அமெரிக்க டாலரில் இருந்து கணக்கிடப் பட்டுள்ளது.

வீடு, போக்குவரத்து, உணவு, உடை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை மதிப்பீடு செய்து மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு உலக அளவில் முக்கியமானதாகும்.

ஒரு நாட்டில், தனிநபரின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நாட்டின் பணவீக்கம் மற்றும் பண மாற்ற விகிதம் ஆகியவை சர்வதேச அளவில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் சேமிப்புகளை நேரடியாக பாதிக்கின்றன.

உலகில் நிலவும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களால் ஏற்படும் ஸ்திரமற்ற நிலை ஆகியவையும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன.

ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சூரிச் போன்ற நகரங்களில், வீடுகள், போக்குவரத்துக் கட்டணம், ஆடைகள், மதுபானங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற சேவைகளின் விலைகள் மிக அதிகம். ஆகவே இந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவுகளும் அதிகம். எனவே, Mercer பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டை விட மும்பை 11 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது. இது வெளிநாட்டினருக்கு இந்தியாவின் மிக விலையுயர்ந்த நகரமாக இருக்கிறது. அடுத்தபடியாக கடந்த ஆண்டை விட நான்கு புள்ளிகள் அதிகரித்து டெல்லி 165 இடத்தில் இருக்கிறது.

சென்னை ஐந்து புள்ளிகள் சரிந்து 189 வது இடத்திலும் பெங்களூரு 6 புள்ளிகள் சரிந்து 195 வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் ஹைதராபாத் 202 வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பு னே எட்டு இடங்கள் முன்னேறி 205 வது இடத்திலும், நான்கு புள்ளிகள் முன்னேறி கொல்கத்தா 207 இடத்திலும் வெளிநாட்டவர்களுக்கு உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களாக உள்ளன.

வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த முதல் 10 நகரங்களில் ஐரோப்பிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. லண்டன் 8வது இடத்திலும், கோபன்ஹேகன் 11 இடத்திலும் , வியன்னா 24 இடத்திலும் , பாரிஸ் 29 இடத்திலும், ஆம்ஸ்டர்டாம் 30 இடத்திலும் இடம் பெற்றுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் 15 வது இடத்தில் துபாய் உள்ளது. தென் அமெரிக்காவில், உருகுவே 42 வது இடத்தில் உள்ளது. வட அமெரிக்காவில், நியூயார்க் நகரம் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்காவின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக பாங்குய் 14வது இடத்தில் உள்ளது. பசிபிக் மண்டலத்தில் சிட்னி நகரம் முதலிடத்தில் உள்ளது.

வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள நகரங்களாக இஸ்லாமாபாத், லாகோஸ் மற்றும் அபுஜா இருக்கின்றன.

Tags: Mumbai tops list of COSTLY cities!
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டன் தேர்தல் வெற்றி வாகை சூடிய இந்தியர்கள்!

Next Post

பிரிட்டன் தேர்தலில் வெற்றி ஸ்டார்மர் சாதித்தது எப்படி?

Related News

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies