திருச்சியில் நடைபெற்று வரும் UPSC முதல்நிலை தேர்வை மத்திய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் நேரில் ஆய்வு நடத்தினார்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற UPSC தேர்வு மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசு நிரப்பி வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சியின் 8 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் 3 ஆயிரத்து 370- பேர் பங்கேற்று எழுதுகின்றனர். இந்நிலையில் புத்தூரில் தனியார் பள்ளியில் நடைபெறும் தேர்வை மத்திய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் ஹரீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.