5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.
இதில் முதலாவது போட்டியில் மோதிய இரு அணிகளில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இந்திய அணி 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. எதிரணியின் இந்த வெற்றியால் 1-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி முன்னிலை வகிக்கிறது.