உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் நீதிக்குழு விசாரணை மேற்கொண்டது.
ஹத்ராஸில் அண்மையில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு காரணமான போலே பாபா சாமியாரின் உதவியாளர் தேவ் பிரகாஷ் மதுக்கர் உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் நீதிக்குழு விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.