எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் விஜய்பூரில் கடந்த பிப்ரவரியில் திறந்து வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை ஜெ.பி.நட்டா ஆய்வு செய்து, அதன் உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைக்கு நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுவதாக தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் மேம்பாட்டுக்கு தன்னால் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்துதர தயார் என்று கூறிய அவர், அங்கு விரைவில் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மருத்துவமனைகளின் தரம் ஒரே நாளில் மேம்பட்டுவிடாது என்றும், இதற்கு பல ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கூறினார்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் தரத்தில் தாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.