திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டில் முறையான சாலை, குடிநீர், தெருவிளக்குகள் இல்லை எனக்கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி தலைவரிடம் பல முறை தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.