குமரி மாவட்டம் ஆலஞ்சோலை அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
இப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்ட குடியிருப்பின் பின்புற பகுதியில் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.