செல்லப்பிராணி வளர்க்க ஆன்லைன் உரிமம் கட்டாயம்! - இராதாகிருஷ்ணன் பேட்டி
Aug 13, 2026, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்லப்பிராணி வளர்க்க ஆன்லைன் உரிமம் கட்டாயம்! – இராதாகிருஷ்ணன் பேட்டி

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 03:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

6 ஆண்டுகள் பிறகு சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் ஜூலை 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பாக தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி முகாம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் என்.ஜி.ஓ.,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் பங்கேற்று பயிற்சிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் இராதாகிருஷ்ணன்,

தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி, world veterinary service சார்பில் இன்று பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 10ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கடைசியாக சென்னையில் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நாய்கள் ஆணா, பெண்ணா, தடுப்பூசி போட்டுள்ளதா உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும் என தெரிவித்தார்.

இந்த கணக்கெடுப்பு பணிகளில் கால்நடை மருத்துவர்கள் மட்டும் இன்றி மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இ்ந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

உலக அளவில் நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கூட அதிக மழை பெய்தது. சென்னையை பொறுத்த வரை ஜூன் மாதம் முதல் சோழிங்கநல்லூரில் ஒரே நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடசென்னையில் 9 சென்டிமீட்டர் ஒரே நாளில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் சுரங்க பாதையில் பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு உள்ளிட்ட 4 வழிகளில் மழை நீர் வெளியேறற்றி வருகிறது. உடனுக்குடன் தேங்கும் மழை தண்ணீரை சரி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான கழிவுநீர் அகற்றும் பணி குடிநீர் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பல சாலைகளில் தண்ணீர் பிரச்சனை சவால்கள் உள்ளது.

இரவு நேர பணிகளும் இதற்காக நடைபெற்று வருகின்றன. மழைக்காலங்களில் பொது சுகாதார பிரச்சனைகள் தண்ணீர், உணவு , பூச்சிகள், கொசு போன்றவைகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது தேவைப்பட்டால் அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும். மழை காலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கவனமாகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார்.

10 ஆயிரத்து 100 நாய்கள் பிடித்து அதில் 7,165 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டதுள்ளது. 7 முதல் 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது
சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிபடப்பட்டுள்ளது. அவற்றை படப்பை உள்ளிட்ட பெட் வளர்ப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.

மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது,  ஒரு சுகாதார பிரச்சனை அல்லாமல் நோய் பிரச்சனை இது அனைத்து நோய்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நீச்சல் குளத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் என தெரிவித்தார். எப்போதும் மழைக்காலங்களில் கொதிக்க வைத்து நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து கை கழுவ வேண்டும் கொரோனா காலங்களில் மட்டுமான இந்த வழிமுறை கிடையாது. எல்லா நாட்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

100 இல் 5 நாய்கள் அதிகம் வெறி தன்மை கொண்டதாக உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளது எனத் தெரிவித்தார்.

Tags: Get online license within next 3 months to keep pet! - Radhakrishnan interview
Share
Tweet
SendShare
Previous Post

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு!

Next Post

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை!- சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி!

Related News

தனியார் மருத்துவமனை அறை வாடகைக்கு கட்டுப்பாடு – நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்!

எதிர்கட்சிகள் கடும் அமளி – மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

வாளையாறு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை குட்டியுடன் உயிரிழப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி புகார் – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை – திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies