ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!
Sep 28, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 13, 2026, 09:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படும் மங்கல சீர்வரிசைப் பொருட்கள் புறப்பட்டன.

ஆண்டாள், பெருமாள் மீது கொண்ட பக்தியால் பூமாலை சூட்டி வழிபட்டதுடன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருடன் ஐக்கியமானதாக ஐதீகம். இதன் காரணமாக ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களுக்கு இடையே நீண்டகாலமாக மங்கலப்பொருட்கள் பரிமாற்றம் நடைபெற்று வந்துள்ளது. இடையில் நின்றுபோன இந்த பாரம்பரியம், இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் தொடர்கிறது.

இதன்படி, பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பின்னர் கோயில் உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட மங்கலப்பொருட்கள், இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீரங்கம்–ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்கு இடையேயான இந்த பாரம்பரிய மங்கலப்பொருட்கள் பரிமாற்றம் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags: ceremonial offeringsSrivilliputhur Andal templeSrirangam Ranganathar templeAadi Pooram chariot procession
Share
Tweet
SendShare
Previous Post

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

Next Post

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies