ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சோளப்பயிரை தின்று மூன்று பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அடுத்த சின்ன ஆனையூர் கிராமத்தில் நல்லாளு என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகள் மேய்ச்சலுக்காக சென்றன.
அப்போது வயலில் இருந்த சோளப்பயிரை மாடுகள் தின்றதால் அதே இடத்தில் உயிரிழந்தன.
தங்களின் வாழ்வாதரத்தை பால் கொடுத்து பாதுகாத்து வந்த மூன்று மாடுகள் உயிரிழந்ததால் இறந்த மாடுகளை கட்டி அணைத்து குடும்பமே கண்ணீர் மல்க கதறி அழுதனர்.