மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிப்பெண்கள் இருவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவன ஒப்பந்த நிறுவன பெண் பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், மதுரை வாடிப்பட்டி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், அவர்களை அவசர சிகிசிச்சை பிரிவில் இருந்து, இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆபத்தான முறையில் ஒரே ஸ்டெரெச்சரில் உட்கார வைத்து மருத்துவமனை பெண் பணியாளர் ஒருவர் முன்னே இழுத்து செல்ல, அதன் பின்னே நோயாளியின் உறவினர் தள்ளி கொண்ட சென்றுள்ளார். இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தராஜ் என்பவர், சுகாதாரத்துறை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, தன் விளைவாக, கர்ப்பிணிப்பெண்கள் இருவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவன ஒப்பந்த நிறுவன பெண் பணியாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.