புதுச்சேரியில், ஐம்பொன் சிலை உள்ளிட்ட சுவாமி சிலைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவசங்கரன், சுவாமி சிலைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
இவர் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஐம்பொன் சிலைகள் மற்றும் சில சிலைகளின் உதிரி பாகங்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் புகார் அளித்ததன் பேரில், அலெக்ஸ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் தனது கூட்டாளிகள் மருதுபாண்டி, ராகவா ஆகியோருடன் சேர்ந்து சிலைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துபாண்டி என்பவரையும் தேடி வருகின்றனர்.