கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதலப்பொழி மீன் பிடி துறைமுகம் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெருமாத்துறை பகுதியை சேர்ந்த ஷாகிர் என்பவரது படகில் 11 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது படகு கவிழ்ந்ததில் 11 பேரும் கடலில் தத்தளித்தனர்.
இதனை பார்த்த சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.