மீண்டும் கதாநாயகனாகும் யோகி பாபு!
Sep 12, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் கதாநாயகனாகும் யோகி பாபு!

Murugesan M by Murugesan M
Jul 9, 2024, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கான்ஸ்டபிள் நந்தன் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு மீண்டும் கதாநாயகனாக  நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘கான்ஸ்டபிள் நந்தன்’ திரைப்படத்தில் யோகி பாபு மீண்டும் கதாநாயகனாக  நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் யோகி பாபு பல தீவிரமான கதைக்களங்களில் கதையின் நாயகனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் இப்போது வரவிருக்கும் திரைப்படமான ‘கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் கான்ஸ்டபிளாக நடிப்பதன் மூலம் ஒரு நடிகராக அடுத்த உயரத்தை எட்ட உள்ளார். இப்படத்தை ஷங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி. ஷங்கர் திருவண்ணாமலை தயாரித்துள்ளார். இயக்குநர்கள் சுந்தர் சி, சசிகுமார், மு. களஞ்சியம் படங்களில் உதவி இயக்குநராக இருந்த பூபால நடேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு  திருவண்ணாமலையில் நேற்று (ஜூலை 7, 2024) பூஜையுடன் தொடங்கியது.

இது குறித்து தயாரிப்பாளர் டி. சங்கர் திருவண்ணாமலை கூறும்போது,

“பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் யோகி பாபு போன்ற தலைசிறந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. கதை சொல்லும் போது அவர் காட்டிய ஆர்வம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

திரையுலகில் உள்ள முக்கிய இயக்குநர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுத் தெளிந்துள்ள இயக்குநர் பூபால நடேசன் போன்ற திறமையான இயக்குநருடன் ’கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து தயாரிக்க விரும்புகிறோம்” என்றார்.

இயக்குநர் பூபால நடேசன் பேசுகையில்,

“நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதம். அப்படியான சங்கர் சார் என் கதையைத் தயாரிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி.

பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தின் விருப்பமான யோகி பாபு சார் போன்ற ஒரு தலைசிறந்த நடிகருடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. நகைச்சுவை நடிகராக அவரது வாழ்க்கை வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது, அவர் தைரியமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்தப் பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. ‘கான்ஸ்டபிள் நந்தன்’ திரைப்படமும் அவரது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். கதையில் யோகி பாபுவுக்கு எதிரான ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் திறமையான நடிகர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்றார்.

Tags: Yogi Babu is the hero again!
Share
Tweet
SendShare
Previous Post

படகு கவிழ்ந்து விபத்து – 11 மீனவர்கள் மீட்பு!

Next Post

குவாரி உரிமையாளர்களை மிரட்டும் விசிக நிர்வாகிகள்?

Related News

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies