ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, விசிக நிர்வாகிகள் சிலர் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமசாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரிக்கு, விசிக கொடியுடன் காரில் சென்ற மூவர் நிதி திரட்டுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதேபோல், காஞ்சிகோவில் பகுதியிலுள்ள நாகராஜ் என்பவருக்கு சொந்தமான குவாரி உரிமையாளிடம், நீட் பயிற்சி மையம் அமைக்க நிதி திரட்டுவதாகக் கூறி விசிக மாவட்டச் செயலாளர் கமலநாதன் என்பவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.