ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!
Jan 15, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

sniper rifle ரக துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா பெற்றிருக்கிறது. sniper rifle ரக துப்பாக்கிகளுடன், பல நாடுகளுக்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பல துறைகளிலும் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. குறிப்பாக , இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன் வரை ,இராணுவத் தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. இப்போது இந்தியா சிறிய ஆயுதங்கள் முதல் பீரங்கிகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் வரை ஏராளமான இராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. மேலும் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதியும் செய்கிறது.

அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த, SSS DEFENCE என்னும் நிறுவனம் .338 Lapua Magnum ஆற்றலுள்ள sniper rifle எனப்படும் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் பல நாடுகளுடன் வெடிமருந்துகள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன.

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது பார்க்கப் படுகிறது.

பெங்களூரில் உள்ள SSS DEFENCE என்னும் நிறுவனம், இந்தியாவை ஒரு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்த, ‘மேக் இன் இந்தியா’ முயற்சியில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப் பட்டதாக தெரிவிக்கும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ், 1,500 மீட்டர் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் sniper rifle ஏற்றுமதி என்பது இந்தியாவின் மிகப் பெரிய சாதனை என்று தெரிவித்திருக்கிறார்.

sniper rifle ரக துப்பாக்கிகள், நவீன போரின் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. துல்லியமாக குறிவைக்கும் திறனால், sniper rifle இராணுவ வீரர்களால் விரும்பப் படுகிறது. இந்திய இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இந்த sniper rifle ரக துப்பாக்கிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன

சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த .338 Lapua Magnum sniper rifle யை பயன்படுத்தி வருகிறது. எனவே , இந்தவகை துப்பாக்கிகளின் தேவை அதிகம். இனி இந்த ரக துப்பாக்கிகளின் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வருவதால், பல நாடுகளுக்கு ஆயுதங்கள் தேவைப் படுகின்றன. அதனால் இந்தியாவின் இராணுவ ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளன.

SSS DEFENCE உருவாக்கி உள்ள இந்த sniper rifle ரக துப்பாக்கிகள், இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஆயுத ஏற்றுமதிக்கான களத்தையும் உருவாக்கி தந்துள்ளது.

மேலும் சர்வதேச இராணுவப் பாதுகாப்புத் துறையில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

Tags: India's new record in arms exports!
ShareTweetSendShare
Previous Post

கார் விலையை குறைத்த மகேந்திரா!

Next Post

தப்பிய போலே பாபா ஜாதி அரசியல் காரணமா?

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies