மிரட்டும் முத்தக் காய்ச்சல் எச்சரிக்கும் மருத்துவர்கள்!
Oct 18, 2025, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிரட்டும் முத்தக் காய்ச்சல் எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Web Desk by Web Desk
Jul 11, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

35 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்களில் 90 விழுக்காடு பேர் முத்த காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அது என்ன முத்த காய்ச்சல்? விரிவாக பார்க்கலாம்.

முத்தம்… அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி… கொடுப்பவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் இடையிலான உறவை பொறுத்து முத்தத்தின் அர்த்தம் சில நேரங்களில் மாறுபடுவதுண்டு. அதைக்குறிக்கும் வகையில் நா.முத்துக்குமார் திரைப்பட பாடல் ஒன்றில் “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று” என எழுதியிருப்பார்.

அன்பை பரிமாறிக்கொள்ள முத்தமிடுவது பரவலாக பின்பற்றுப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட முத்தமிட்டு கொள்கின்றன. அப்படிப்பட்ட முத்தம் மூலம் ஒரு காய்ச்சல் பரவுகிறது என்பதே இங்கு பிரச்னை.

பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மதுக்கூடத்தில் தான் சந்தித்த நபருக்கு முத்தம் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கடுமையான தொண்டை வலி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அவர், உடல் பலவீனமடைந்து நடக்கவே முடியாத நிலைக்குச் சென்றார்.

அதே போல் பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை VICKY PATTISON-க்கும் இதே நிலை ஏற்பட்டது. இவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டது முத்த காய்ச்சலால்…

1920-ஆம் ஆண்டு வாக்கிலேயே கண்டறியப்பட்டதாக கூறப்பட்டாலும் முத்த காய்ச்சல் இப்போதுதான் பரவலாக அறியப்படுகிறது. முத்த நோயின் மருத்துவப்பெயர் INFECTIOUS MONONUCLEOSIS. முத்தமிடும் போது அதிகம் பரவுவதால் இது KISSING DISEASE என்று அழைக்கப்படுகிறது. உமிழ்நீர் மூலம் பரவும் EPSTEIN – BARR VIRUS முத்த நோயை ஏற்படுத்துகிறது. இதற்கு GLANUDLAR FEVER என்ற பெயரும் உண்டு. ரத்தம், இருமல், பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய கோப்பை மற்றும் பிரஷ்ஷை பயன்படுத்துவது போன்றவற்றாலும் இந்தத் தொற்று பரவுகிறது.

தலைவலி, அதிக உடல்சோர்வு, தொண்டையில் புண் அல்லது வலி, கழுத்துப்பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகள் பெரிதாவது, உடலில் ஆங்காங்கே சிவந்து போவது உள்ளிட்டவை இந்நோயின் முக்கிய அறிகுறிகள். பாதிக்கப்பட்டவர் குணமடைய 2 முதல் 4 வாரங்கள் வரை தேவைப்படும்.

EBV தொற்றுக்கு வழக்கமான காய்ச்சலுக்கான சிகிச்சைகள், வலிநிவாரணிகள், போதுமான ஓய்வு, திரவ உணவுகளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்வது என பாதிப்பை பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படும்.

முத்தம் என்பது அன்பை பரிமாறத்தான் என்றாலும் நிறைய பேரிடம் அந்த அணுகுமுறையை பின்பற்றாமல் கொஞ்சம் அளவாக பரிமாறினால் முத்த காய்ச்சலில் இருந்து தப்பலாம்.

Tags: Threatening kissing fever doctors warn!
ShareTweetSendShare
Previous Post

பாடகியின் கனவை நிறைவேற்றிய நெப்போலியன்!

Next Post

பில்லூர் அணையை தூர்வாரும் பணி தொடக்கம்!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies