சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆம்ஸ்ட்ராங் பெயரில் இருக்கை அமைக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இதுதொடர்பாக பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி தலைமையில் ஆலோசனை நடத்தியதாகவும், அதனடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் கடிதம் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
அதே போல் தேசிய எஸ்.டி.,எஸ்.சி., ஆணையத்திடமும் சில பிரச்சனைகளை குறிப்பிட்டு புகார் மனு அளித்துள்ளதாக பொன் பாலகணபதி தெரிவித்தார்.