நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 20 நபர்கள் இறந்ததாக எழுந்த புகாரை அடுத்து உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குந்தலாடி பகுதியில் மருத்துவர் அகஸ்டின் என்பவர் நடத்தி வந்த மனநல காப்பகத்தில், 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் மனநல காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சுகாதாரமற்ற முறையில், எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாமல் மனநல காப்பகம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, 13 பேர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்து, மனநல காப்பகத்திற்கு கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சீல் வைத்தனர்.
மேலும் தலைமறைவான காப்பகத்தின் உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் உழியர்கள் 10 பேருக்கு சம்மன் வழங்கி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.