ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மூன்று நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு தொடங்கியது.
மாநாட்டில் நாடு முழுவதும் 46 பிராந்தியங்களிலிருந்து பிராந்திய தலைவர்கள், இணை பிராந்திய தலைவர்கள், மண்டல தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு பிராந்திய தலைவர்களுக்கான ஆலோசனையை வழங்கினார்.
வரும் 14-ஆம் தேதி மாலை 6 மணிவரை மாநாடு நடைபெறுகிறது. பிராந்திய அளவில் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை மதிப்பிட்டு, அடுத்த ஆண்டுக்கான செயல் திட்டம் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் மாநாடு ராஞ்சியில் நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.